நாமக்கல்: திரைப்பட காமெடி நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் மரணமடைந்தார். உறங்கி கொண்டிருக்கும் போதே அவரின் உயிர் பிரிந்தது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு அல்லிநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் தனசேகரன் என்கிற லிட்டில் ஜான். தற்போது 43 வயதான இவர் 3 அடி உயரம் கொண்டவர். வெங்காயம், ஐம்புலன் ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார். கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் திருச்செங்கோடு அருகே மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.