ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் பரத்வாஜ் தீர்த்தம் அருகில் பக்தர்களுக்கு ஓய்வறைகள்-அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம்

ஸ்ரீகாளஹஸ்தி : ‘‘ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் பரத்வாஜ் தீர்த்தம் அருகில் பக்தர்களுக்கு ஓய்வறைகள் நிர்மானிக்கப்படுதல்’’ என்பது பல்வேறு தீர்மானங்கள், அறங்காவலர் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன்  கோயிலில் கடந்த மார்ச் 1.3.2022 மகா சிவராத்திரியன்று கோயில் புதிய அறங்காவலர் குழு பதவி ஏற்றது.

இதில் அஞ்சூரு.தாரக சீனிவாசலு அறங்காவலர் குழு தலைவர் உள்பட 20 பேர் கொண்ட அறங்காவலர் குழுவிற்கான அரசு ஆணை வெளியிட்டதால் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி முன்னிலையில் அறங்காவலர் குழு பதவி ஏற்றது. இந்நிலையில், கடந்த 4-ம் தேதி (திங்கட்கிழமை) மாலை சிவன் கோயில் நிர்வாக அலுவலகத்தில் எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி தலைமையில் முதல் அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மொத்தமாக 52 கோயில் வளர்ச்சி பனிகள் குறித்து அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கோயிலில் ராகு-கேது பூஜைகள் (ஆன்லைன்) வலைதளத்தின் மூலம் குறுஞ்செய்தி அனுப்புதல் மற்றும் ராகு-கேது பூஜையில் பயன்படுத்தும் நாகப் படகுகள் கூடுதலாக தயாரிப்பு, பக்தர்கள் சுவாமி  தரிசனத்திற்காக செல்லும் வரிசைகளில் மாற்றங்கள், பிரமுகர்களுக்கு தனி சிறப்பு வரிசைகள், போக்குவரத்து பிரச்சனை தீர்வுக்காக தனி ஊழியர்களை நியமிப்பது, கோயில் அருகில் உள்ள பரத்வாஜ் தீர்த்தத்தில் பக்தர்களுக்கு ஓய்வறைகள் நிர்மானம், கோசாலை வளர்ச்சி, கிரிவலப்பாதையில் பசுமை தானம் ஏற்பாடு செய்தல்,  சிவா டூ சிவா சாலை அமைத்தல், சொர்ணமுகி ஆற்றை அழகுபடுத்துதல், கனகதுர்க்கை அம்மன் கோயில் மலை சீர்படுத்துதல், (சுப்பிரமணிய சுவாமி)  விக்ஞான கிரி மலைக்கு லிப்ட் அமைத்தல், வரதராஜ சுவாமி கோயிலுக்கு சுற்றுச்சுவர் போன்ற வளர்ச்சிப் பணிகளுக்கு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோயில்

அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: