×

சூலூரில் தொழில் பூங்கா, ராமேஸ்வரத்தில் மீன்பிடி துறைமுகம், திருவள்ளூரில் புதிய சிப்காட் : சட்டப்பேரவையில் அமைச்சர்களின் பதில்கள்!!

சென்னை ; மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் கூடியது. கேள்வி நேரம் தொடங்கியதும் , உறுப்பினர் தங்களது தொகுதி சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினர். உறுப்பினர்களின் கேள்விக்களுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இன்றைய கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் அளித்த பதில்கள் பின்வருமாறு..

*காங்கிரஸ் உறுப்பினர் முனிரத்தினம் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், சோளிங்கர் தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கல் கிராமத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்படும். ரூ.94 லட்சம் மதிப்பில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார். மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் காலி பணியிடங்களை வேளாண் படித்தவர்களை கொண்டு நிரப்ப காங்கிரஸ் விடுத்த கோரிக்கைக்கு, எங்கெங்கு காலிப்பணியிடங்கள் உள்ளன என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்,என்று பன்னீர் செல்வம் கூறினார்.

*சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரன், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தனி தாலுகாவாக விரைவில் செயல்பட தொடங்கும். 3 லட்சம் பட்டா வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது, என்றார்.

*உறுப்பினர் ராஜேந்திரன் கோள்விக்கு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, திருவள்ளூர் தொகுதியில் புதிய சிப்காட் அமைப்பது குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று கூறினார். மேலும் சூலூரில் 500 ஏக்கரில் தொழில் பூங்கா, பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக குறிப்பிட்டார்.

*பழவேற்காடு பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க நிர்வாக ரீதியாக நிதிஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார். ராமேஸ்வரத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அமைச்சர் பதில் அளித்தார்.




Tags : Industrial Park ,Sulur ,Rameswaram ,New Chipkot ,Tiruvallur , Sulur, Industrial Park, Rameswaram, Fishing Port
× RELATED உலக மகளிர் தினத்தை முன்னிட்டு...