×

ரஷ்யாவும் ஐஎஸ் தீவிரவாதிகளும் ஒன்னுதான்... நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐ.நா.அவையை மூடலாம்.. ஐ.நா.வில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரை!! ..

நியூயார்க் : போர் குற்றம் புரிந்த ரஷ்ய ராணுவத்தை சர்வதேச நீதி அமைப்பு முன்பு நிறுத்தமுடியா விட்டால் ஐக்கிய நாடுகள் அவையை இழுத்து மூடிவிட்டு செல்வதே சிறந்தது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் புச்சா நகரில் ரஷ்யா ராணுவத்தால் 400 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்ட நிகழ்வு உலகம் முழுவதுமாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஐ.நா,வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். 2ம் உலக போருக்கு பிறகு உக்ரைனில் ரஷ்ய ராணுவம் கொடூர போர் குற்றத்தை புரிந்து இருப்பதாக ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகளில் தங்கியிருந்த மக்கள் கொல்லப்பட்டதோடு, கார்களில் சென்றவர்கள் பீரங்கிகளால் காரோடு நசுக்கப்பட்டு பச்சை படுகொலை செய்யப்பட்டதாக கூறினார்.ரஷ்ய ராணுவத்திற்கும் ஐஎஸ் தீவிரவாதிகளும் எந்த வித்தியாசமும் இல்லை என்று ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டி இருக்கிறார்.ரஷ்யாவை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்காவிட்டால் ஐ.நா.அவையை இழுத்தி மூடிவிடலாம் என்று ஆவேசமாக தெரிவித்தார். உக்ரைனின் புச்சா நகரில் சிதறி கிடந்த மனித சடலங்கள் தொடர்பாக ரஷ்ய ராணுவம் மீது தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.


Tags : Russia ,IS ,UN ,President ,Zhelensky , Russia, Action, UN, Ukraine, President, Zhelensky
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...