×

கோபி அருகே இறந்துபோனதாக புதைக்கப்பட்டவர் வீட்டுக்கு திரும்ப வந்ததால் பரபரப்பு

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே துறையம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி (55). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி அய்யம்மாள் (50). இவர்களுக்கு கார்த்தி மற்றும் பிரபுகுமார் என்ற 2 மகன்கள். மூர்த்தி  உள்ளூர் மட்டுமின்றி ஈரோடு, தமிழகத்தின் வெளி மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூர்த்தி கரும்பு வெட்டச்செல்வதாக வீட்டில் கூறிச்சென்றார். ஆனால் வெகுநாட்கள் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி மற்றும் மகன்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர்.

ஆனால் மூர்த்தி குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இந்நிலையில் கடந்த 31ம் தேதி சத்தி பஸ் நிலையத்தில் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக கர்த்திக்கின் வாட்ஸ் அப்பில் தகவல் வந்தது. இதனையடுத்து அங்கு சென்று சடலத்தை பார்த்த கார்த்திக், சடலம் அழுகிய நிலையில் இருந்ததால் தோற்றம், உடல் அமைப்பை பார்த்து தனது தந்தைதான் என்ற முடிவுக்கு வந்தார். போலீஸ் அனுமதியோடு சடலத்தை பெற்ற கார்த்தி சொந்த ஊருக்கு எடுத்து வந்து முறைப்படி சடங்குகள் செய்து உடலை அடக்கம் செய்தனர். உறவினர்கள், நண்பர்கள் வீட்டிற்கு வந்து துக்கம் விசாரித்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மூர்த்தி வீட்டிற்கு வந்தார். மனைவி மற்றும் மகன்கள் பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்தனர். குடும்பத்தினர் அவரை கட்டிப்பிடித்து கண்ணீல் மல்க நடந்தவற்றை கூறினர். இறந்தவர் மீண்டு வந்ததாக அந்த பகுதி முழுவதும் தகவல் பரவியது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச்சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இது குறித்து தகவல் கிடைத்ததும்  பங்களாபுதூர் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இப்போது மீண்டு வந்தவர் மூர்த்தி என்றால் புதைக்கப்பட்டவர் யார்? என்ற கேள்வி எழுந்தது. இதைத்தொடர்ந்து நேற்று பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ குழுவினர், மூர்த்தி என்று அடக்கம் செய்யப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்தனர்.புதைக்கப்பட்டவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Kobe , Excitement as the man buried near Kobe returned home
× RELATED கோபி, சுதாகரின் அடுத்த அதிரடி; “கோடியில் இருவர்” வெப் சீரிஸ்