×

ஒலிபரப்பாளர்களுக்கான சேவை இணையதளம்: அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்தார்

சென்னை: ஒன்றிய தகவல் ஒலிபரப்பு  மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், டெல்லியில் ஒலிபரப்பு சேவை இணையதளத்தை தொடங்கி வைத்தார். ஒலிபரப்புத்துறையில் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் நடவடிக்கையிலும், ஒலிபரப்பாளர்கள் பல்வேறு வகையான உரிமங்கள், அனுமதி, பதிவுகளுக்காக விண்ணப்பிக்கும் நடவடிக்கையை விரைவுப்படுத்தவும் இந்த சேவை இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், ‘‘அரசின் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, மேலும் பொறுப்புடையதாக மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

விண்ணப்பங்கள் பல்வேறு பிரிவுகளின் அனுமதிக்காக எடுத்துக்கொள்ளப்படும் நேரத்தை இந்த இணையதளம் பெருமளவு குறைக்கும். அதே நேரத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளவும் உதவிகரமாக இருக்கும். தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலைவரிசைகள், டெலிபோர்ட் பயன்பாட்டாளர்கள், எம்எஸ்ஓக்கள், சமுதாயம் மற்றும் தனியார் வானொலி அலைவரிசை நடத்துவோருக்கான சேவைகளை, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஒரே குடையில் வழங்குவதாக இந்த இணையதளம் இருக்கும். ஒட்டுமொத்த ஒலிபரப்புத்துறைக்கு அதிகாரம் அளிப்பதோடு, 900க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலைவரிசைகள், 70 டெலிபோர்ட் ஆபரேட்டர்கள், 1,700 பல்வகை சேவை ஆபரேட்டர்கள். 350 சமுதாய வானொலி நிலையங்கள், 380 தனியார் பண்பலை அலைவரிசைகளுக்கு நேரடியாக பலனளிக்கும்,’’ என்றார்.

Tags : Minister ,Anurag Thakur , Service Website for Broadcasters: Launched by Minister Anurag Thakur
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்