சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம்: சென்னையில் ஓபிஎஸ், திருச்சியில் இபிஎஸ் பங்கேற்றனர்

சென்னை: சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னை, வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும், திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றனர். தமிழகத்தில் சொத்துவரி 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை கடந்த வாரம் உயர்த்தப்பட்டது. இதை கண்டித்தும், சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் ஏப்ரல் 5ம் தேதி (இன்று) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக கடந்த வாரம் அறிவித்தனர்.

அதன்படி, இன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதே போன்று, திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, “தமிழக அரசு சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்” என்று தலைவர்கள் வலியுறுத்தி பேசினர்.

Related Stories: