பப்ஜி மதனுக்கு தேவைப்பட்டால் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ள பப்ஜி மதனுக்கு தேவைப்பட்டால் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யூடியூப்பில் ஆபாசமாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு பப்ஜி மதன், குண்டர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பப்ஜி மதனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னிருந்து உடல்நிலை சரி இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, பப்ஜி மதனுக்கு முதுகு வலி ஏற்பட்டு சிறையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வலி அதிகமானதால், பப்ஜி மதன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்தநிலையில், தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, பப்ஜி மதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை நீதிபதிகள் இன்று விசாரணைக்கு எடுத்தனர். அப்போது அவரது உடல்நிலை மற்றும் இது ஒரு சாதாரண வழக்கு; இதற்காக மதன் 9 மாதங்களாக சிறையில் இருக்கிறார் என மதன் தரப்பில் காரணம் தெரிவிக்கப்பட்டது.

அதற்க்கு நீதிபதிகள், தேவைப்பட்டால் பப்ஜி மதனுக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும் என கூறியுள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories: