சோனியா காந்தி தலைமையில் காங். நாடாளுமன்ற குழு கூட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நடந்தது.

டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வி, கட்சியின் அமைப்பு தேர்தல், இந்தாண்டு இறுதியில் இமாச்சல் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல், மாநிலங்களவையில் காலியாகும் உறுப்பினர்கள் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும், ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் இருஅவைகளிலும் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Related Stories: