×

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக மாவோயிஸ்டுகள் கண்டன போஸ்டர்: வயநாட்டில் பரபரப்பு

திருவனந்தபுரம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வு 5 மாநில தேர்தலுக்கு பிறகு நாளுக்கு நாள் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து மாவோயிஸ்ட் இயக்கத்தின் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இங்குள்ள தாமரைசேரி அருகே பூதப்பாடி மட்டிக்குன்னு பஸ் ஸ்டாப் உள்பட சுற்றுபுற பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

அதில், ‘பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு பொது மக்களை கொடுமைப்படுத்துகிறது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்களை துன்புறுத்தும் பிரதமர் மோடி இதற்கு பதில் சொல்லியே தீரவேண்டும். இதேபோல கேரளாவில் பினராய் விஜயன் அரசு கொண்டுவர தீர்மானித்துள்ள அதிவேக ரயில் பாதை திட்டத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். விவசாய நிலங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பொது மக்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். இதில் பாஜ இரட்டை வேடம் போடுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. போஸ்டர்கள் ஒட்டப்பட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : Maoists ,Wayanad , Maoists protest against petrol, diesel price hike Poster: Tension in Wayanad
× RELATED ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டெல்லி பல்கலை. முன்னாள் பேராசிரியர் விடுதலை!!