×

கொரோனா பரிசோதனை ஷாங்காய் நகருக்கு ராணுவம் வந்தது

பெய்ஜிங்: சீனாவில் முதன் முதலில் பரவிய கொரோனா தொற்று பரவல் பின்னர் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல நகரங்களில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் மிகப்பெரிய நகராமான ஷாங்காயில் தொற்று பரவலை கட்டுப்படுத்த 2.6 கோடி மக்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் உதவுவதற்காக 2000 ராணுவ வீரர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உட்பட சுமார் 10 ஆயிரம் பேர் ஷாங்காய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சீனாவில் ஒரே நாளில் 13 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 9 ஆயிரம் பேர் ஷாங்காய் நகரை சேர்ந்தவர்கள்.

Tags : Corona test Army ,Shanghai , Corona test Army arrives in Shanghai
× RELATED ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் பைனலுக்கு முன்னேறியது போபண்ணா ஜோடி