×

2 ஆண்டுகளாகியும் பணி தொடங்கவில்லை: சாத்தான்குளத்தில் காவலர் குடியிருப்பு கட்டப்படுமா?

சாத்தான்குளம்; சாத்தான்குளத்தில் பழைய காவலர் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் கட்டப்படாததால் காவலர்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். சாத்தான்குளம் தாலு கா அலுவலகத்தை சுற்றி காவல் நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் காவல் நிலையம், சார்நிலை கருவூலம் செயல்பட்டு வருகின்றன. இதில் காவல் நிலையம் அருகில் காவலர் குடியிருப்புகள் இருந்தன. இந்நிலையில் காவலர் குடியிருப்பு கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அவை பழுதுப்பட்டு காணப்பட்டது.

இதையடுத்து பழுதான காவலர் குடியிருப்பு கட்டிடத்தை இடித்து புதியதாக கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அதே பகுதியில் டிஎஸ்பி அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்ட தேர்வு செய்யப்பட்டது. இதனையொட்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் டிஎஸ்பி அலுவலகம் கட்டப்படவும், பழுதான காவலர் குடியிருப்புகளும் இடிக்கப்பட்டது. அதன்பின் கட்டப்படாமல் உள்ளது. ஆனால் டிஎஸ்பி அலுவலகம் கட்டி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

காவலர் குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து வந்த காவலர்கள் வேறு இடத்தில் வாடகை வீட்டில் இருந்து பணிக்கு வருகின்றனர். காவலர் குடியிருப்பு பகுதியில் 21 கட்டிடங்கள் இருந்த நிலையில் தற்போது ஆறு கட்டிட குடியிருப்பு மட்டுமே செயல்பட்டு வருகிறது. காவலர் குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு அதில் குடியிருக்கலாம் என நம்பி இருந்த நிலையில் 2ஆண்டுகளாக அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. அந்த இடத்தில் காவல் நிலையத்திற்கு வரும் விபத்து மற்றும் திருட்டு வாகனங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இது காவலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெண் காவலர்கள் உள்ளிட்ட பலர் வேறு இடத்தில் வாடகை கட்டிடத்தில் இருந்து பணிக்கு வந்து செல்ல மிகுந்த சிரமத்தில் உள்ளனர். ஆதலால் மாவட்ட எஸ்பி, இதனை கவனித்து சாத்தான்குளம் காவலர் குடியிருப்பு பகுதியில் இடிக்கப்பட்ட குடியிருப்புகளை உடனடியாக கட்டி காவலர்கள் குடியிருக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என காவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Sathankulam , Work has not started for 2 years: Will a police station be built at Sathankulam?
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...