பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி தற்கொலை: மாணவன் உட்பட 3 பேர் கைது

சண்டிகர்: அரியானாவில் பலாத்காரத்துக்கு ஆளான மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்விவகாரத்தில் பள்ளி மாணவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அரியானா மாநிலம் சார்க்கி தாத்ரி மாவட்டம் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் (17), 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்த மாணவியை, அதேபகுதியைச் சேர்ந்த மூன்று பேர் பக்கத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

அவர்கள் மாணவியை கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னை மூன்று பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரை தேடி வந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த மாணவி மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் மாணவியின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘குற்றம்சாட்டப்பட்ட மூன்று ேபரில் ஒருவனுக்கு 21 வயது, மற்றொருவனுக்கு 16 வயது, மேலும் மற்றொருவன் பள்ளி மாணவன். இவர்களில் இரண்டு பேரை கைது செய்துள்ளோம். மூன்றாவது குற்றவாளியை தேடி வருகிறோம்’ என்றனர்.

Related Stories: