×

வெற்றி கணக்கை தொடங்கும் சன்ரைசர்ஸ்: லக்னோவுடன் இன்று மோதல்

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை டிஒய் பாட்டில் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 12வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் முதல் போட்டியில், ராஜஸ்தானிடம் 61 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த நிலையில் இன்று வெற்றி கணக்கை தொடங்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது. வில்லியம்சன் தலைமையிலான அணியில் அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, அப்துல் சமத் என இளம்வீரர்களுடன் பூரன், மார்க்ரம் என அனுபவ வீரர்கள் உள்ளனர். வேகத்தில் உம்ரன் மாலிக் கவனம் ஈர்த்து வருகிறார்.  மறுபுறம் லக்னோ முதல் போட்டியில் குஜராத்திடம் தோல்வி கண்ட நிலையில், 2வது போட்டியில் சென்னையை வீழ்த்தியது. இன்று வெற்றியை தொடரும் முனைப்பில் உள்ளது. கே.எல்.ராகுல், டிகாக், லீவிஸ், தீபக்கூடா என அதிரடி வீரர்கள் உள்ளனர். பந்து வீச்சில் அவேஷ்கான், ரவி பிஷ்னோய்யுடன் ஹோல்டர் வருகை மேலும் வலுசேர்க்கிறது.  இந்த மைதானத்தில் நடப்பு சீசனில் இதுவரை 3 போட்டி நடந்துள்ளது. இதில் 2ல் சேசிங் செய்த அணியே வென்றுள்ளது. கடைசியாக மும்பைக்கு எதிரான ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்து வென்றது. ஆனால் அது மாலை 3.30 மணிக்கு நடந்த போட்டியாகும். இதனால் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சையே தேர்வு செய்யும்.

Tags : Sunrisers ,Lucknow , Sunrisers start winning streak: clash with Lucknow today
× RELATED ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை...