மியாமி ஓபன் டென்னிஸ்: அல்கராஸ் பட்டம் வென்று புதிய சாதனை

மியாமி: அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வந்தது. இதில் ஆடவர் ஒற்றையரில் நேற்றிரவு நடந்த இறுதி போட்டியில், ஸ்பெயினின் 18 வயதான கார்லோஸ் அல்கராஸ், 6ம் நிலை வீரரான நார்வேயின் 23 வயது காஸ்பர் ரூட்டுடன் மோதினார். இதில் முதல் செட்டை 7-5 என அல்கராஸ் கைப்பற்றினார். 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர் 6-4 என தன்வசப்படுத்தினார்.

இதன் மூலம் 7-5, 6-4 என வெற்றி பெற்ற அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் 37 ஆண்டு கால மியாமி டென்னிஸ் வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்தார். மியாமி ஓபனில் பட்டம் வென்ற முதல் ஸ்பெயின் வீரர் என்ற சிறப்பையும் பெற்றதுடன் ஏடிபி தரவரிசையில் 11வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

மகளிர் இரட்டையர் பைனலில் ஜெர்மனியின் லாரா சீக்மண்ட்,  ரஷ்யாவின் வேரா ஸ்வோனரேவா ஜோடி, 7-6,7-5 என்ற செட்கணக்கில், பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ், ரஷ்யாவின் வெரோனிகா ஜோடியை வீ்ழ்த்தி பட்டம் வென்றது.

Related Stories: