×

பெரம்பலூர் அருகே எசனையில் பன்னீர் திராட்சை சாகுபடி-விவசாயி அசத்தல்

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே எசனையில் பருத்தி விளையும் மண்ணில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்து விவசாயி அசத்தியுள்ளார்.மானாவாரி சாகுபடியான பருத்தி அதிகம் விளையும் பெரம்பலூர் மாவட்டத்தில் திராட்சை சாகுபடியென்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்றாகும். இருந்தும் நக்கசேலம் அருகேயும், பாடாலூரிலும் பல வருடங்களுக்கு முன்பு தலா ஒருவர் மட்டும் பன்னீர்த் திராட்சை சாகுபடியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தினருக்கு சேலம், பெங்களூரு, திருச்சி, திண்டுக்கல், தேனி பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்வதால் மட்டுமே இன்பம் கிடைத்து வந்த திராட்சைப் பழங்கள், எசனையில், சாகுபடி செய்யும் இடத்திற்கே நேரில் சென்று, சளைக்காமல் ரசித்து, ருசித்துச் சாப்பிடும் வரம் கிடைத்திருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகேயுள்ள எசனை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் சுருளிராஜன் என்கிற பெருமாள் (48). இவர் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில், அரசலூர் கைகாட்டி எதிரே, சாலையோரம் கிழக்கேவுள்ள தனதுவயலில் அரைஏக்கர் பரப்பளவில் கொடி வகை யான பன்னீர்திராட்சையை பந்தல்அமைத்து சாகுபடி செய்துள்ளார். வேரழுகல் நோய், சாம்பல்நோய் தாக் காமல் மருந்து தெளித்து, வாராவாரம் தண்ணீர் பாய் ச்சி 15 மாதங்கள் பராமரித்தால், அழகு திராட்சைப் பழ ங்கள் அறுவடைக்குத் தயாராகி விடுகிறது.

இதற்காக சுருளிராஜன் துறையூர் தா லுக்கா எரக்குடி பகுதியில் விதைகளை வாங்கி வந்து பயிரிட்டுள்ளார். 15 மாதம் கழித்து அறுவடைக்குத் த யாராகும் பன்னீர் திராட்சை, அடுத்த 4மாதத்திற்கு 1 முறையும் அறுவடைக்குத் தயாராகி விடுகிறது. தற் போது பந்தல்களில் கொத்துக் கொத்தாக காய்த்துக் குழுங்கும் பன்னீர்த் திராட் சை பழங்களின் விற்பனை தொடங்கியுள்ளது.

பெரம்பலூர்-ஆத்தூர் சா லையில் பைக்குகளில், பஸ்களில் பயணிப்போர் அனைவருக்கும், பார்க்கும்போதே பரவசத்தை ஏற்படுத்துவதால், இறங்கி பன்னீர் திராட்சை பழங்களுக்கு இ டையே புகுந்து படமெடுத்து செல்வது வழக்கமாகியுள் ளது.பந்தலுக்கே வந்து பலரும் பர்சேஸ் செய்வதால், ஏற்றுமதிக்கு எந்த வாய்ப் புமே இல்லாமல் போய்விட் டது என்கிறார் சுருளிரா ஜ ன். வெயிலுக்கு ஏற்ற குளி ச்சியான திராட்சைப்பழ சா குபடி எசனையை ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்குஉள்ளாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Esanai ,Perambalur ,Asathal , Perambalur: A farmer is disturbed by cultivating water grapes in the cotton growing soil in Esanai near Perambalur.
× RELATED எசனை காட்டு மாரியம்மன் கோயில் தேரோட்டம்