×

ஏடிஎம் எண் கேட்டா சொல்லாதீங்க 1930க்கு புகார் கொடுக்க மக்களுக்கு சொல்லி கொடுங்க-பெரியகுளம் போலீசாருக்கு விழிப்புணர்வு

பெரியகுளம் : செல்போனில் வங்கி ஏடிஎம் எண் கேட்டு பணத்தை பறிக்கும் கும்பலின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க தொடர்ந்து வங்கி நிர்வாகமும் விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஆனாலும், தொடர்ந்து பண மோசடிகள் நடந்த வண்ணம் உள்ளது. இவை அனைத்தையும் தடுக்கும் விதமாக சைபர் கிரைம் காவல் துறையினர் 1930 என்ற இலவச அலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் காவலர்களுக்கு பெரியகுளம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார் வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் மோசடி செய்த பணத்தை பறிக்கும் கும்பலிடம் இருந்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பணத்தை மீட்டு எடுப்பது எப்படி என்பதை விளக்கி கூறினார். மேலும், இதுபோன்று வங்கி நூதன மோசடியில் பாதிக்கப்பட்ட நபர்கள் வரும்பொழுது அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.

உடனடியாக காவல் துறையினர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டது. மேலும், வங்கி கணக்குகளில் இருந்து நூதன முறையில் பணம் பறிபோகும் போது பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக 1930 என்ற எண்ைண தொடர்பு கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். மேலும், செல்போனில் வங்கி ஏடிஎம் எண் கேட்டு அழைப்பு வந்தால், அவர்களிடம் ஏதும் சொல்லாமல், போலீசாரிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்க விழிப்புணர்வு வழங்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், இன்ஸ்பெக்டர் மீனாட்சி உட்பட ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

Tags : Periyakulam Police , Periyakulam: The atrocities of the gang who extort money by asking for a bank ATM number on their cell phone are increasing day by day. Continue to prevent this
× RELATED பெரியகுளம் அருகே கலவரம் கல்வீச்சில்...