×

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையிலிருந்து இன்று முதல் 45 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவு

சாத்தனூர்:  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 2021-2022ம் ஆண்டிற்கு சாத்தனூர் இடது மற்றும் வலதுபுறக் கால்வாய்களின் ஏரிகளுக்கு நாள் ஒன்றுக்கு முறையே 140 க.அடி / வினாடி மற்றும் 160 க.அடி / வினாடி வீதம் மொத்தம் 300 கனஅடி/வினாடி தண்ணீரை 04.04.2022 முதல் 19.05.2022 வரை 45 நாட்களுக்கு தொடர்ச்சியாக 1166.40 மி.க.அடி தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு  நிலங்களுக்கு உரிமை நீர் 800 மி.க.அடி நீரினை நீர் பங்கீடு விதிகளின்படி ஏப்ரல் 30க்குள் விவசாயிகளின் கோரிக்கைப்படி தேவைப்படும்பொழுது மூன்று தவணைகளில் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடவும் அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள 12543 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sathanur dam ,Thiruvannamalai district , Order to open water from Sathanur dam in Thiruvannamalai district for 45 days from today
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...