×

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2010-ல் நடந்த சம்பவத்திற்கு 2021-ல் தாமதமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என சிவசங்கர் பாபா தரப்பு மனு அளித்துள்ளது. புகார்தாரர்கள் பாதிக்கப்பட்ட போது மைனர் வயதில் இருந்தனர் என சிபிசிஐடி தரப்பு பதில் தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா தொடர்ந்த வழக்கில் சிபிசிஐடி பதில்தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அப்பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ வழக்குகள் பதிவு செய்து கடந்த ஜூன் மாதம் டெல்லியில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், 2010-ல் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா தொடர்ந்த வழக்கில் சிபிசிஐடி பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2010-ல் நடந்த சம்பவத்திற்கு 2021-ல் தாமதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், புகார்தாரர்கள் பாதிக்கப்பட்டபோது மைனர் வயதில் இருந்தனர் என சிபிசிஐடி பதில் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : CBCID ,Sivashankar Baba , ICC orders CPCIT to respond to case filed by Sivasankar Baba seeking quashing of cases against him
× RELATED வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 3...