பெரணமல்லூர் அருகே பரபரப்பு டிராக்டரில் ஏற்றிச்சென்ற வைக்கோல் மின்கம்பியில் உரசி தீப்பிடித்து எரிந்தது

பெரணமல்லூர் : பெரணமல்லூர் அருகே வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டர் மீது மின்கம்பி உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி முற்றிலும் எரிந்தது.திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த செப்டாங்குளம் பகுதியிலிருந்து நேற்று மாலை 4 மணியளவில் அதிகளவில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு டிராக்டர் தாடிநொளம்பை வழியே சென்றது. டிராக்டரை வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டை சேர்ந்த சக்தி(21) என்பவர் ஓட்டிச்சென்றார்.

தாடிநொளம்பை பகுதியில் தாழ்வாக சென்ற மின்கம்பியை கவனிக்காமல் டிரைவர் வண்டியை ஓட்டி சென்றபோது, மின்கம்பி வைக்கோல் மீது உரசியது. இதனால், ஏற்பட்ட மின் பொறியில் வைக்கோல் தீப்பற்றி எரிய தொடங்கியது. திடீரென வைக்கோல் தீப்பற்றி எரிவதை கண்ட டிரைவர் உடனே டிராக்டரை ட்ரைலர் பகுதியிலிருந்து கழற்றி தூரமாக எடுத்து சென்று நிறுத்தினார்.  தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்கள்  உடனே பெரணமல்லூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் வைக்கோல் தீயினை அணைக்க மிகவும் போராடினர். ஆனாலும் ட்ரைலரில் இருந்த வைக்கோல் அனைத்தும் தீயில் கருகி நாசமானது.

Related Stories: