×

தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டது செல்லாதாம்; பாஜக வேட்பாளருடன் நுஸ்ரத் ‘டேட்டிங்’கில் இருந்தாரா?.. மேற்குவங்க அரசியலில் புதிய பரபரப்பு

கொல்கத்தா: தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டது சட்டபடி செல்லாது என்று கூறிய திரிணாமுல் எம்பி நுஸ்ரத், பாஜக வேட்பாளருடன் ‘டேட்டிங்’கில் இருந்தாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது மேற்குவங்க அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மேற்குவங்கத்தை சேர்ந்த பிரபல நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் எம்பியுமான நுஸ்ரத் ஜஹான், கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவரை துருக்கி நாட்டில் 2019ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஒரு சில ஆண்டுகளே இருவரும் இணைந்திருந்த நிலையில், தம்பதிக்குள் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால்,  கடந்த ஆறு மாதங்களாக தாங்கள் இருவரும் பிரிந்து இருப்பதாக நிகில் ஜெயின் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார். அதேநேரம், டோலிவுட் நடிகர் யஷ் தாஸ்குப்தாவுடன், நுஸ்ரத் ஜஹானுக்கு தொடர்பு இருந்தது. இருவரும் ராஜஸ்தான், டெல்லி போன்ற இடங்களில் சுற்றிய புகைப்படங்கள் வைரலாகின. இதற்கிடையே, நடந்து முடிந்த மேற்குவங்க சட்டப் பேரவை தேர்தலில் பாஜக சார்பில் சண்டிதாலா தொகுதியில்,  யஷ் தாஸ்குப்தா போட்டியிட்டார். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சுவாதியிடம் 41,347 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். இந்த நிலையில், நுஸ்ரத் ஜஹான் தற்போது ஆறு மாத கர்ப்பிணியாக இருப்பதாக ஊடகங்களில் பரபரப்பு செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும், பாஜகவை சேர்ந்த  நடிகர் யஷ் தாஸ்குப்தாவுடன் நுஸ்ரத் ஜஹான் ‘டேட்டிங்’ இருந்தாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து, நுஸ்ரத்தின் கணவர் நிகில் அளித்த பேட்டியில், ‘நாங்கள் இருவரும் பிரிந்து செல்லும் நேரம் விரைவில் முடிவுக்கு வரும். நுஸ்ரத் கர்ப்பத்திற்கும், எனக்கும்  எந்த தொடர்பும் இல்லை’ என்று கூறியுள்ளார். கடந்த ஒரு வாரமாக நுஸ்ரத் கர்ப்பம் குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி வந்ததால், அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘நிகில் ஜெயினுடனான என்னுடைய திருமணம் செல்லாது. ஏனெனில் இந்தியாவில் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் செய்து கொள்ளும் திருமணங்களுக்கு சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அங்கீகாரம் தேவைப்படுகிறது. எங்களது திருமணம் (துருக்கி – இந்திய திருமணம் சட்டம் வேறுவேறு) அப்படி நடக்கவில்லை. அதனால், விவாகரத்து பற்றிய கேள்வியே எழவில்லை. எங்களுக்கு இடையிலான பிரிவு எப்போதோ முடிந்துவிட்டது’ என்று தெரிவித்துள்ளார். மேலும், நிகில் ஜெயினின் பெயரை குறிப்பிடாமல், நுஸ்ரத் தனது அறிக்கையில், ‘பணக்காரராகிய அவர் (நிகில்), எனது வங்கிக் கணக்குகளை சட்டவிரோதமாக பயன்படுத்தினார். எங்களுக்குள் ஏற்பட்ட பிரிவுக்கு பின்னும் எனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்துக்கொண்டார். ஏற்கனவே நான் கணக்கு வைத்திருந்த வங்கிக்கு சென்று பிரச்னை செய்துள்ளார். விரைவில் இதுதொடர்பாக போலீசில் புகார் அளிப்பேன். தேவைப்பட்டால் அதற்கான ஆதாரங்களை வெளியிடுவேன். எனது தனிப்பட்ட வாழ்க்கையையோ அல்லது எனக்கு சம்பந்தமில்லாத யாரை பற்றியும் பேசமாட்டேன்’ என்று கூறியுள்ளார். இருந்தும், அவரது கர்ப்பம் குறித்து எவ்வித பதிலும் நேரடியாக தெரிவிக்காததால், மேற்குவங்கத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

The post தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டது செல்லாதாம்; பாஜக வேட்பாளருடன் நுஸ்ரத் ‘டேட்டிங்’கில் இருந்தாரா?.. மேற்குவங்க அரசியலில் புதிய பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Nusrat ,BJP ,West Bengal ,Kolkata ,Trinamool ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...