×

புதுச்சேரி கடற்கரையில் ராட்சத பொம்மைகளின் நடன நிகழ்வு: வார இறுதி நாட்களில் கண்கவர் நிகழ்ச்சிகள் நடத்த கோரிக்கை

புதுச்சேரி: பிரெஞ்சு நாட்டில் வசந்தகால திருவிழாவை ஒட்டி புதுச்சேரி கடற்கரையில், பிரெஞ்சு தூதரகத்தால் ராட்சத பொம்மை நடன நிகழ்வு நடத்தப்பட்டது. பல்வேறு தமிழ் திரைப்பட பாடல்களுக்கு ராட்சத பொம்மைகள் நடனமாடியது. வசந்தகால திருவிழாவை ஒட்டி, பிரான்ஸ் நாட்டின் சார்பில் பல்வேறு நாடுகளில் ஏராளமான நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே புதுச்சேரியில் பாய்மரக் கப்பல் அணிவகுப்பை நடத்தினர். தொடர்ந்து கடற்கரை சாலையில் ராட்சத பொம்மைகள் அணிவகுப்பும், தமிழிசை பாடல்களுக்கு நடனமாடும் நிகழ்வும் நடந்தது.

காதல், உற்சாகம், துள்ளல் என பல்வேறு தமிழிசை பாடல்களுக்கு ராட்சத பொம்மைகள் நடனமாடியது. பிரெஞ்சு துணை தூதர் லிஸ் டால்போட் வரை புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் இந்நிகழ்வை தொடங்கி வைத்தனர். கடற்கரை சாலை காந்தி திடலில் துவங்கி பிரெஞ்சு தூதரகத்தில் இந்நிகழ்வு நிறைவடைந்தது. வசந்தகால திருவிழா கொண்டாட்டம் பிரான்ஸ் நாட்டில் இருக்கும்; அதே கால கட்டத்தில் வழக்கமாக நடக்கும் இந்த நிகழ்ச்சியை கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் நடத்த இயலவில்லை. இந்த ஆண்டு வெகு உற்சாகமாக இந்த நிகழ்ச்சிகள் களைகட்டின. இதேபோல் வார இறுதி நாட்களில் புதுச்சேரி அரசு இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் கூறினர்.    


Tags : Giant Dolls Dance Event ,Pondicherry Beach , Pondicherry, beach, giant toy, dance, show
× RELATED புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு...