அதிமுக ஆட்சியில் மக்கள் சுபிட்சமாக மகிழ்ச்சியாக இருந்தார்கள்.. அதுதான் ராமராஜ்யம் : அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு!!

மதுரை : தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக ராமராஜ்ஜியத்தை கொடுக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, சொத்து வரி உயர்வுக்கு எதிராக வரும் 5ம் தேதி அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற உள்ள என்றார்.

தொடர்ந்து, ராமராஜ்ஜியத்தை நோக்கி இந்தியா முன்னேறுவதாக தமிழக ஆளுநர் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, பத்தாண்டு காலம் தமிழகத்தில் அதிமுக நடத்தியது தான் ராமராஜ்ஜியம் என்றார்.மேலும் பேசிய அவர், எம்ஜிஆர் நடத்தியது ராமராஜ்யம். அதிமுக ஆட்சியில் மக்கள் சுபிட்சமாக மகிழ்ச்சியாக இருந்தார்கள்.அதுதான் ராமராஜ்யம் அதைத்தான் ஆளுநர் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். விரைவில் தமிழகம் ராமராஜ்யம் ஆக மாறும். எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் ராம ராஜ்ஜியத்தை அதிமுக கொடுக்கும், என்றார்.

Related Stories: