×

பண்டிட்கள் விரைவில் காஷ்மீர் திரும்பலாம்: ஆர்எஸ்எஸ் தலைவர் உறுதி

ஜம்மு: காஷ்மீரில் மக்கள் அமைதியாக வாழ்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டு வருவதால் பண்டிட்கள் விரைவில் அங்கு குடியேறும் வாய்ப்பு ஏற்படும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார். காஷ்மீர் பண்டிட்டுகளின் நிகழ்ச்சியான நவ்ரே விழா ஜம்முவில் கொண்டாடப்பட்டது. இதில், அகில இந்திய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் காணொலி வாயிலாக பேசுகையில், ‘‘கடந்த 1990ம் ஆண்டில் ஏற்பட்ட கலவரத்தில் காஷ்மீரை விட்டு வெளியேறிய பண்டிட்கள் பற்றிய திரைப்படம் ‘காஷ்மீர் பைல்ஸ்’. பண்டிட்கள் எந்த சூழ்நிலையில் அங்கிருந்து வெளியேறினார்கள் என்பது பற்றி உலகம் முழுவதும்  மக்கள் இடையே இந்த படம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மீண்டும் தங்கள் சொந்த நிலத்துக்கு திரும்புவதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை ஒன்றிய அரசு நீக்கி உள்ளதால் பண்டிட்கள் தங்கள் சொந்த பூமிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான தகுந்த சூழ்நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. இனிமேல் யாரும் உங்களை அங்கிருந்து வெளியேற்ற முடியாதபடி நிலை உருவாக்கப்படும்,’’ என்றார்.

Tags : Pandits ,Kashmir ,RSS , Pandits may return to Kashmir soon: RSS chief assured
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!