×

உலோக வளையம், சிலிண்டர் வடிவத்தில் விண்ணில் இருந்து விழுந்த மர்ம பொருட்களால் பரபரப்பு: மகாராஷ்டிராவில் அதிகாரிகள் ஆய்வு

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு விண்ணில் இருந்து எரிந்தபடி மர்ம பொருட்கள் விழுந்தன. இது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்றுமுன் தினம் இரவு 7.50 மணியளவில் சந்திராபூர் மாவட்டம், சிந்தேவாகி தாலுகாவில் உள்ள லட்போரி கிராமத்திலும், பவன்பார் கிராமத்திலும் விண்ணில் இருந்து எரிந்தபடி 2 பொருட்கள் விழுந்தன. உடனே கிராம மக்கள் ஓடிச் சென்று பார்த்தனர். அப்போது லட்போரி கிராமத்தில் உள்ள ஒரு வெட்ட வெளியில் உலோக வளையம் ஒன்று காணப்பட்டது.

முன்பு அது அங்கு இல்லை. இதனால் அந்த வளையம் விண்ணில் இருந்து விழுந்ததாக கருதப்படுகிறது. பவான்பார் கிராமத்தில் சிலிண்டர் வடிவில் ஒரு பொருள் காணப்பட்டது. இதன் விட்டம் 1.5 அடி. இது பற்றி தகவல் கிடைத்ததும் கலெக்டர் அஜய் குல்கானே விரைந்து வந்து அவற்றை பார்வையிட்டார். மேலும் மும்பையில் உள்ள பேரிடர் பராமரிப்பு துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தரபட்டுள்ளதாகவும் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் வந்து மர்ம பொருட்களை ஆய்வு செய்வார்கள் என்றும் கலெக்டர் கூறினார்.

 மாவட்டத்தின் இதர மாவட்டங்களிலும் இது போன்ற பொருட்கள் விழுந்தனவா என்று பார்வையிட்டு தகவல் தெரிவிக்குமாறு தலையாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற பொருட்கள் விழுவதை மகாராஷ்டிராவில் உள்ள புல்தானா, அகோலா மற்றும் ஜால்காவ் மாவட்டங்களிலும், மத்திய பிரதேசத்தில் உள்ள பர்வானி, போபால், இந்தூர், பெட்டூல் மற்றும் தர் மாவட்டங்களிலும் பொது மக்கள் பார்த்ததாக கூறப்படுகிறது. விண்ணில் இருந்து விழுந்தவை விண்கற்கள், அல்லது செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த பயண்படுத்தப்படும் பூஸ்டர் ராக்கெட்டுக்களின் உடைந்த பாகங்களாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

Tags : Maharashtra , Metal ring, caused by mysterious objects falling from the sky in the form of cylinders: officials study in Maharashtra
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...