காஜல் அகர்வாலுக்கு படக்குழு தாராளம்

ஐதராபாத்: தெலுங்கில் ராம் சரண் தயாரித்துள்ள படம், ’ஆச்சார்யா’. இதில் சிரஞ்சீவி, ராம் சரண், காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே, சோனு சூட் நடித்துள்ளனர். ஒரு பாடலுக்கு ரெஜினா நடனம் ஆடியுள்ளார். இப்படம் வரும் 29ம் தேதி திரைக்கு வருகிறது. மணிசர்மா இசை அமைக்க, கொரட்டால சிவா இயக்கியுள்ளார். இப்படத்தின் புரமோஷன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க காஜல் அகர்வால் விரும்பியதாகவும், தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால், மும்பையில் இருந்து ஐதராபாத்துக்கு வந்து அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று ராம் சரண் அவருக்கு அட்வைஸ் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தன் உடல்நலனை கருத்தில் கொண்டு படக்குழு தாராளம் காட்டியது குறித்து காஜல் அகர்வால் மனம் நெகிழ்ந்துள்ளாராம்.

Related Stories: