பணத்துக்காக மற்ற மொழிகளில் நடிக்க மாட்டேன்: ஜான் ஆபிரகாம்

மும்பை: பாலிவுட்டை சேர்ந்த பல நடிகர், நடிகைகள் தற்போது தென்னிந்திய மொழிகளில் அதிகமாக நடித்து வருகின்றனர். தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ‘காட்பாதர்’ என்ற படத்தில் சல்மான்கான் நடித்துள்ளார். யஷ் நடிக்கும் ‘கேஜிஎஃப்’ என்ற பான் இந்தியா படத்தில் சஞ்சய் தத், ரவீணா டாண்டன் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் அஜய் தேவ்கன், அலியா பட் நடித்திருந்தனர். இதையடுத்து பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ என்ற பான் இந்தியா படத்தில் ஜான் ஆபிரகாமை நடிக்க கேட்டனர். இதுபற்றி அவர் கூறுகையில், ‘தென்னிந்திய மொழியில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை. நான் ஒரு இந்தி நடிகர். பணத்துக்காக மற்ற மொழிகளில் நடிக்க மாட்டேன். குறிப்பாக துணை நடிகராகவோ, வில்லனாகவோ நடிக்க மாட்டேன்’ என்றார்.

Related Stories: