மயாமி ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் அசத்தல் வெற்றி

மயாமி: அமெரிக்காவில் நடந்த மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ஜப்பான் நட்சத்திரம் நவோமி ஒசாகாவுடன் மோதிய ஸ்வியாடெக் 6-4, 6-0 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். நடப்பு சீசனில் தொடர்ச்சியாக 17வது வெற்றியை வசப்படுத்தி உள்ள அவர், தொடர்ந்து 3வது சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த வெற்றிகளின் மூலமாக, இன்று வெளியாகும் உலக தரவரிசையில் நம்பர் 1 அந்தஸ்தையும் வசப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: