×

வங்கதேசத்துக்கு 274 ரன் இலக்கு

தென் ஆப்ரிக்க அணியுடன் டர்பனில் நடக்கும் முதல் டெஸ்டில், வங்கதேச அணிக்கு 274 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கிங்ஸ்மீட் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 367 ரன்னும், வங்கதேசம் 298 ரன்னும் எடுத்தன. 69 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா, 3ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்தது. எர்வீ 3, எல்கர் 3 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். எர்வீ 8 ரன்னில் வெளியேறினார். கேப்டன் எல்கர் 64 ரன், கீகன் 36 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுக்க, தென் ஆப்ரிக்கா 204 ரன்னில் சுருண்டது (74 ஓவர்). ரிக்கெல்டன் 39 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேச பந்துவீச்சில் மிராஸ், எபாதத் தலா 3, டஸ்கின் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 274 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது.

Tags : Bangladesh , 274-run target for Bangladesh
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...