கிராம பகுதிகளுக்கு பேருந்து சேவை: எஸ்.சந்திரன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் மலைப் பகுதிகளில் உள்ள காக்களூர், ராமாபுரம், வெங்கல்ராஜ்குப்பம், பாதகுப்பம் ஆகிய கிராமங்களுக்கு பேருந்து சேவை அமைத்து தரப்படவில்லை. இதனால். அக்கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் சுமார் 3 கி.மீ நடந்து சென்று பேருந்துகளில் பயணிக்க வேண்டிய நிலையில் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், கிராம மக்களின் கோரிக்கை ஏற்று முதல் முறையாக (27பி) டவுன் பஸ் சேவை தொடக்க விழா காக்களூரில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திருத்தணி அரசுப் பேருந்து பணிமணை கிளை மேலாளர் முனுசாமி தலைமை வகித்தார். பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.ரவீந்திரா வரவேற்றார். இதில், எஸ்.சந்திரன் எம்எல்ஏ பங்கேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பேருந்து சேவையை தொடங்கிவைத்து அத்திமாஞ்சேரிப்பேட்டை வரை பயணம் செய்தார். தொடர்ந்து, ராமாபுரம், பாதகுப்பம் ஆகிய கிராமமக்கள் பெரும் திரளாக பங்கேற்று பூசணிக்காய், தேங்காய் உடைத்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

பொதட்டூர்பேட்டையிலிருந்து காக்களூர், ராமாபுரம், வெங்கல்ராஜ்குப்பம், பாதகுப்பம், அத்திமாஞ்சேரிப்பேட்டை, நொச்சிலி, கே.ஜி.கண்டிகை வழியாக திருத்தணிக்கு தினந்தோறும் டவுன் பஸ் சென்று வரும் என்றும், இதன் மூலம் கிராம மக்கள் எளிதில் பயணம் மேற்கொள்ள வசதியாக இருக்கும் என்றும் எஸ்.சந்திரன் எம்எல்ஏ தெரிவித்தார். இதில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் இ.கே.இதயசூரியன், பொதட்டூர்பேட்டை பேரூர் செயலாளர் டி.ஆர்.கே.பாபு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.எம்.சுகுமாரன், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, பொன்.சு.பாரதி, கோபி, அச்சுதன், அன்பழகன், பேச்சாளர் முரசொலி மூர்த்தி, பொதட்டூர்பேட்டை பேரூராட்சி கவுன்சிலர் எம்.டி.பிரகாஷ், சி.ஆர்.பட்டடை வெங்கடேசன், ரவிச்சந்திரன் யாதவ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: