×

திருத்தணி அரசு மருத்துவமனையில் சாதாரண சிகிச்சைக்குக்கூட இன்சூரன்ஸ் கார்டு மூலம் பணம் எடுக்கப்படுகிறதா? நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருத்தணி: திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற வருகின்றனர். இதுதவிர புற நோயாளிகளாகவும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது மருத்துவமனையில் நோயாளிகளிடம் சாதாரண காய்ச்சல், இருமல் சிகிச்சையாக இருந்தால்கூட இன்சூரன்ஸ் கார்டு பெறப்பட்டு அதன் மூலம் பணம் எடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இன்சூரன்ஸ் கார்டு இல்லாதவர்களிடம் ஆதார் கார்டு, குடும்ப அட்டையை கொடுங்கள் என்று நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் தெரிகிறது. அவ்வாறு கார்டுகளை கொடுக்காவிட்டால் சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனையில் காக்கவைப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறும்போது, `விபத்து, அறுவை சிகிச்சை தேவைப்படுவர்களுக்குத்தான் இன்சூரன்ஸ் காடுகள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் சாதாரணமாக காய்ச்சலுக்குகூட இன்சூரன்ஸ் கார்டு வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது என்ன நியாயம். திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு ஸ்பான்சர் அடிப்படையில், கட்டில், மெத்தைகள் வழங்கப்பட்டுள்ளது. அவற்றை பெற்றுக்கொண்டு பணம் கொடுத்து வாங்கியதுபோல கணக்கு காண்பிக்கின்றனர். விவரம் தெரிந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டாம் என்று மேல் சிகிச்சைக்கு தேவைப்படுவதாக கூறி, வேறு மருத்துவமனைக்கு அனுப்பிவிடுகின்றனர்.

மேலும் திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் கர்ப்பிணிகளை தரையில் அமர வைத்தும் மின்விசிறி இல்லாத பகுதியில் அமர வைத்தும் சிகிச்சை அளிக்கின்றனர். இந்த அவலம் குறித்து எஸ்.சந்திரன் எம்எல்ஏவின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் எம்எல்ஏ, திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பூபதி, திருத்தணி நகரமன்ற தலைவர் சரஸ்வதி பூபதி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், இதுபோன்ற புகார் வரக்கூடாது. தமிழக அரசுக்கு நற்பெயர் ஏற்படுத்தும் வகையில் பணியாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் இதை மீறி தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அலட்சியமாக நடந்துகொள்கின்றனர்’ என்றனர்.

Tags : Trivandrum Government Hospital , Is money being taken through insurance card even for normal treatment at Trivandrum Government Hospital? Urging to take action
× RELATED திருத்தணி அரசு மருத்துவமனையை தலைமை...