×

வாடகை வீடு, கடைகளின் கட்டணம் உயரும் சொத்து வரி உயர்வை திரும்ப பெற அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: வாடகை வீடு, கடைகளின் கட்டணம் உயர்வதை தடுக்க சொத்து வரி உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என்று தமிழக அரசுசை விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:
சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சொத்துவரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. ஏற்கனவே, தண்ணீர் வரி, சாலைவரி, பாதாளசாக்கடை வரியை கட்ட முடியாமல் மக்கள் தவிக்கும் நிலையில் சொத்து வரியை உயர்த்திருப்பது அவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கம் செயல். மேலும் சொத்து வரி உயர்வால் வாடகை வீடுகள் மற்றம் கடைகளினின் கட்டணமும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உயர்த்தப்பட்ட சொத்து வரியை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vijaykanth ,govt , Vijaykanth urges govt to reverse property tax hike
× RELATED சித்திரை திருவிழா பாதுகாப்பு:...