பாலகிருஷ்ணனுக்கு வைகோ வாழ்த்து

சென்னை: மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட கே.பாலகிருஷ்ணனுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: மதுரையில் மார்ச் 30ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1 வரை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாட்டில், தமிழ் மாநிலச் செயலாளராக மீண்டும் கே.பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு பொதுச்செயலாளர் வைகோ டில்லியிலிருந்து அலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: