×

புதிய வினாத்தாள் மூலம் 12ம் வகுப்பு கணிதத் தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

சென்னை: புதிய வினாத்தாள் மூலம் 12ம் வகுப்பு கணிதத் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் இன்னும் ஓரிரு மாதங்களில் இறுதித்தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமையான நாளை 12ம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதத்தேர்வு நடைபெற இருந்தது.

நாளை நடைபெற இருந்த 12ம் வகுப்புக்கான 2ம் கட்ட திருப்புதல் தேர்வின் கணித பாட வினாத்தாள் கசிந்தது. ஏற்கனவே நடைபெற்ற முதல்கட்ட தேர்வில் வினாத்தாள்கள் கசிந்து சர்ச்சையானது. இந்நிலையில் புதிய வினாத்தாள் மூலம் 12ம் வகுப்பு கணிதத் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். திருப்புதல் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் இறுதித் தேர்வில் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Examination ,Minister Love Mahesh , Class 12 Maths Examination to be conducted with new question paper: Minister Anbil Mahesh Explanation
× RELATED தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு...