×

சென்னை-பஞ்சாப் இன்று மோதல்: தோல்வியில் இருந்து மீளும் கிங்ஸ் எது?

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 11வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா, 2வது போட்டியில், லக்னோவிடம் தோல்வி அடைந்த புதுகேப்டன் ஜடேஜா தலைமையிலான சென்னை இன்று வெற்றி கணக்கை தெடங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தீபக் சாஹர் இல்லாத நிலையில் பந்துவீச்சு பலவீனமாக உள்ளது.

மறுபுறம் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் முதல் போட்டியில் பெங்களூருவை வீழ்த்திய நிலையில், நேற்று முன்தினம் கெல்கத்தாவிடம் வீழ்ந்தது. இன்று வெற்றிபாதைக்கு திரும்ப போராடும். இரு அணிகளும் இதுவரை 25 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 15ல் சென்னை, 10ல் பஞ்சாப் வென்றுள்ளது. கடைசியாக மோதிய 8 போட்டியில் 5ல் சென்னை தான் வெற்றி பெற்றுள்ளது.

Tags : Chennai ,Punjab ,Kings , Chennai-Punjab clash today: Which Kings will bounce back from defeat?
× RELATED அஷுதோசின் அதிரடி ஆட்டம் வீண் பஞ்சாப்பை போராடி வென்றது மும்பை