×

7வது முறையாக மகளிர் உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா:

ஓவல்: மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றது. நியூசிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன். கிறைஸ்ட்சர்ச்சில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்து 357 என்ற சவாலான இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 43.4 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 285 ரன்களை மட்டும் எடுத்தது. ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி 138 பந்தில் 26 பவுண்டரிகளுடன் 170 ரன்கள் எடுத்தார். மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 7வது முறையாக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா மகளிர் அணி.


Tags : Australia ,Women's World Cup , Australia wins Women's World Cup for the 7th time
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...