×

நெல்லை, தென்காசியில் சாரல் மழை: வெப்பத்தின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி

நெல்லை: நெல்லை அதன் சுற்றுவட்டார பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி நெல்லை நகரம் வண்ணாரப்பேட்டை, தச்சநல்லூர், கொக்கிரகுளம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை சாரல் மலை பெய்தது அதேபோல் அம்பாசமுத்திரம், பாபநாசம் ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட  பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கன மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருந்த நிலையில் மாலையில் குளிச்சியான சூழல் நிலவியது திடீரென அரை மணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்தது அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியதிலிருந்து வெயில் சதம் அடித்த நிலையில் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி அதன் சுற்றுவட்டரங்களில் நேற்று மழை பெய்து வெப்பம் தணிந்து குளிச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



Tags : Nellai ,Tenkasi , Nellai, Tenkasi, rain people happy
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!