கந்தர்வகோட்டை பகுதியில் கோடை வெயிலுக்கு இதமாக குளத்தில் நீந்தும் ஜல்லிக்கட்டு காளை

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதிகளில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தமிழக அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடைபெற்று வருகிறது. காளைகளை வளர்ப்பவர்கள் காளையின் மீது ஒரு கண் வைத்து வளர்த்து பராமரித்து வருகிறார்கள். ஜல்லிகட்டு காளைகள் வாடிவாசலில் சீறிப்பாய்ந்து வந்தலும் வளர்ப்பவர்களிடம் சிறு குழந்தை போல தான் இருக்கும்.

வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பராமரிப்பில் இருந்து வருகிறது. தற்சமயம் கோடை வெயில் அதிகமாக இருப்பதாலும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் காளைகள் கலந்து கொள்வதாலும் காளைகளை தினசரி குளத்தில் நன்றாக நீந்த விட்டு குளிப்பாட்டி வருகிறார்கள். இது குறித்து மாட்டின் உரிமையாளர் கூறும்போது மாடுகள் நீரில் நீந்துவதால் வாடிவாசலில் ஓடும்போது சோர்வு இல்லாமல் காளைகள் போகும் என்றும் கூறுகிறார்கள்.

Related Stories: