பொன்னேரியில் மர்மமாக இறந்த மான்

பொன்னேரி: பொன்னேரியில் மர்மமான முறையில் மான் ஒன்று இறந்துகிடந்தது. பொன்னேரி பகுதிகளான பழவேற்காடு, காட்டுப்பள்ளி, காட்டூர், கூடுவாஞ்சேரி, காட்டாவூர் உள்ளிட்ட பகுதிகளில் மான்கள் சுற்றித்திரிகின்றன. கோடை காலங்களில் இவை தண்ணீருக்காக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருகிறது. அங்கு தெருநாய்கள் மற்றும் வீட்டு நாய்கள் மூலமாக கடிபட்டு இறக்கின்றன. இதுபோன்று இந்த மானும் நாய்கள் கடித்து இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே வனத்துறையினர் இதுபோன்று மான்கள் இருக்கும் இடங்களில் அவைகளுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவுகளை தயார்செய்து கொடுத்து வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: