ஆரணி ஆற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பொன்னேரி: பொன்னேரி  அருகே ஆரணி ஆற்றின் கரைக்கு அருகே வெள்ளோடை உள்ளது. இது பொன்னேரி  கிருஷ்ணாவரத்துக்கும் ஏலியம்பேட்டுக்கும் நடுவே ஆரணி ஆற்றில் கலக்கிறது.  மழைக்காலங்களில் ஆற்றில் இருந்து வரக்கூடிய வெள்ளநீர் ஆரணி ஆற்றில் கலக்கிறது.

இந்நிலையில் சில தனிநபர்கள் இந்த ஓடையின் குறுக்கே கரை  அமைத்து பாதை அமைத்ததாக பொதுப்பணி துறையினருக்கு தகவல் கிடைத்தது.  அதன்பேரில் பொதுப்பணி துறையினர் பொக்லைன் இயந்திரங்களுடன் நேற்றுமுன்தினம்  நேரில் சென்றனர்.

அங்கு, ஆற்றை ஆக்கிரமித்து அமைத்திருந்த கரையையும் சாலையையும்  அகற்றினர். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை பலகை வைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: