×

ஒவ்வொரு மாதமும் திருவள்ளூர் மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொழிற்சாலைகள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றுடன் நேரடி கலந்துரையாடல்களை எளிதாக்குவதற்கும், வாரியத்தின் செயல்பாடுகளை மிகவும் வெளிப்படையான மற்றும் நம்பகமான முறையில் செயல்படுத்துவதற்கும், வாரியம் நேரடி கலந்தாய்வு அமர்வு நடத்த முன்வந்துள்ளது. தனிநபர், தொழிற்சாலைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது நலச் சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க, சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள, மாசு தொடர்பான பிரச்சினைகள் மற்றும்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகள், கருத்துகளை தெரிவிக்க இந்த அமர்வில் பங்கேற்று சம்பந்தப்பட்ட வாரிய அதிகாரிகளை சந்திக்கலாம்.

நேரடி கலந்தாய்வு அமர்வு ஒவ்வொரு மாதமும் 5ம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட  சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், திருவள்ளூர் அலுவலகத்தில் நடைபெறும். 5ம் தேதி விடுமுறையாக இருப்பின், அடுத்த வேலை நாளில் நடைபெறும் நேரடி கலந்துரையாடலில் கலந்துகொள்ள விரும்புவோர், தங்கள் வருகைக்கு முன்னதாகவே இதற்காக வாரியத்தால் உருவாக்கப்பட்டுள்ள இணையவழி செயலியில் பதிவு செய்து கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
 இதன் மூலம் வாரிய அதிகாரிகள் பங்கேற்பாளர்களுக்கு நேரடி கலந்துரையாடல் நாளில் அல்லது முடிந்தால் அதற்கு முன்னதாகவும் பதிலளிக்க இயலும். வாரிய இணையதளமான www.tnpcb.gov.in என்ற இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்கள் தங்கள் வருகையின் போது ஆதார் அட்டையை தவறாமல் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .முதல் நேரடி கலந்தாய்வு அமர்வு ஏப்ரல் 5 ம் தேதி வாரியத்தின் அலுவலகத்தில் நடைபெறும். மேலும் பதிவு செய்வதற்கான இணைப்பு அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Tags : Tiruvallur Pollution Control Board , Every month Consultation meeting at Tiruvallur Pollution Control Board office
× RELATED நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்;...