×

பரங்கிமலையில் ஆம்னி பஸ் மோதி கானா பாடகர் பலி: டிரைவர் கைது

ஆலந்தூர்: பம்மல் மூவேந்தர் நகரை சேர்ந்தவர் சுடர் ஒளி(21). கானா பாடகர். இவர் தனது நண்பர்களுடன் நேற்று நந்தம்பாக்கத்தில் துக்க நிகழ்ச்சியில் கானா பாடல்களை பாடி விட்டு பம்மல் நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்தார். பரங்கிமலை சிமென்ட் ரோடு சிக்னல் அருகே சென்றபோது அவ்வழியே சென்ற கார் மீது பைக் திடீரென மோதியது. பின்னர் அதே வேகத்தில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஆம்னி பேருந்தின் மீது பைக் மோதியது. இதில் பைக்கில் சென்றவர்கள் கீழே விழுந்தனர். இதில் சுடர்மணி பலத்த காயமடைந்தார்.

இதனையடுத்து அவரது நண்பர்கள் ஆம்னி பேருந்து டிரைவர் மற்றும் மேலும் விபத்தினை படம்பிடிக்க வந்த மாலை பத்திரிக்கை கேமராமேனையும் தாக்கினர். பின்னர் காயமடைந்த சுடர் ஒளியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிசிக்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருந்துவர்கள் தெரிவித்தனர். புகாரின்படி பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஆம்னி பேருந்து டிரைவர் நடராஜன்(53) என்பவரை கைது செய்தனர்.Tags : Amnie ,Bus ,Parangimalay , In Parangimalai Omni bus collides with Ghanaian singer: Driver arrested
× RELATED கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை...