×

நடிகர் ஷாருக்கான் மகனான ஆர்யன் கான் வழக்கின் சாட்சி திடீர் மரணம்: போதை பொருள் வழக்கில் திருப்பம்

மும்பை: நடிகர் ஷாருக்கான் மகனான ஆர்யன் கானின் போதை பொருள் வழக்கில் தொடர்புடைய சாட்சி திடீரென்று மரணம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டு அக் டோபர் 2ம் தேதியன்று கோவாவின் கார்டெலியா கப்பலில், மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அந்த கப்பலில் போதை பொருட்களுடன் இருந்த ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட பலரை கையும் களவுமாக பிடித்தனர். அதற்கு அடுத்த நாள் ஆர்யன்கான் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

 இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்த போதைபொருள் வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் போதை பொருள் தடுப்பு பிரிவின் முக்கிய சாட்சியான பிரபாகர் சைல் என்பவர் நேற்றிரவு மாரடைப்பால் மரணமடைந்தார். செம்பூரில் உள்ள மஹுல் பகுதியில் உள்ள அவரது வீட்டில் நேற்று மாரடைப்பால் காலமானதாக அவரது வழக்கறிஞர் துஷார் கந்தாரே தெரிவித்தார். முக்கிய சாட்சி மரணமடைந்ததால், போதை பொருள் வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காரணம், போதை பொருள் வழக்கை கையாண்ட மண்டல இயக்குனர் சமீர் வான்கடே, சிலரை கைது செய்வதற்காக லஞ்சம் வாங்கியதாக பிரபாகர் சைல் குற்றம்சாட்டி இருந்தார். மேலும், போதை  பொருள் வழக்கு தொடர்பாக முக்கிய தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Shah Rukh Khan ,Aryan Khan , Actor Shah Rukh Khan's son Aryan Khan witnesses sudden death in case: Drugs Twist in the case
× RELATED ஏர்போர்ட், ஜிம், ஓட்டல்களில்...