அமெரிக்காவுடன் எதிர்கட்சிகள் கைகோர்ப்பு; இம்ரான் கான் கூறுவது கட்டுக்கதை: எதிர்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அரசியல் ெநருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், நாளை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில் ‘ஜியோ நியூஸ்’ டிவியின் ‘நயா பாகிஸ்தான்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர்  ஷெஹ்பாஸ் ஷெரீப், அப்போது அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு வெளிநாட்டு சதி இருப்பதாகவும், அமெரிக்காவுடன் எதிர்கட்சிகள் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். அவர் கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை; கட்டுக்கதைகளை கூறுகிறார். மார்ச் 7ம் தேதி பிரதமருக்கு ரகசியக் கடிதம் வந்ததா? என்பதை ெதளிவுபடுத்த வேண்டும். வெளிநாட்டு நிதியுதவி விவகாரத்தில் இம்ரான் கான் சட்டத்தை மீறியுள்ளார்.

சவூதி அரேபியா, சீனா போன்ற நட்பு நாடுகளை கோபப்படுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர்களின் மீது பொய்யான ஊழல் வழக்குகளைப் பதிவு செய்தார். ஆனால் அந்த வழக்குகளை நீதிமன்றங்கள் குப்பைத் தொட்டியில் வீசின. நாளை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம், பாகிஸ்தானில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். இம்ரான் கான் கட்சியின் அதிருப்தி தலைவர்கள் தங்கள் மனசாட்சிப்படி வெளியேறி உள்ளனர். தற்போதைய அரசியல் நெருக்கடியில் இருந்து பாகிஸ்தானை மீட்டெடுக்கவும், மக்களின் நலனுக்காக பாடுபடவும் எதிர்க்கட்சிகள் கூட்டு முடிவெடுக்கும்’ என்றார்.

Related Stories: