விமானங்கள் மோதல் 4 விமானி பலி

சியோல்: தென்கொரியாவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் மோதியதால் 4 விமானிகள் உயிரிழந்தனர்.தென் கொரிய விமானப் படைக்கு சொந்தமான, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கேடி-1 ரகத்தை சேர்ந்த 2 விமானங்கள், சச்சியோன் பகுதியில் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டன.

பயிற்சிக்கு புறப்பட்ட 5 நிமிடங்களில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக 2 விமானங்களும் நேருக்கு நேர் மோதி சிதறின. இதில் 2 விமானங்களிலும் பயணித்த பயிற்சி விமானிகள், பயிற்சியாளர்கள் 4 பேரும் பலியாகினர். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணி நடக்கிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

Related Stories: