துளித்துளியாய்.....

* ஐபிஎல் போட்டிகளுக்கான பார்வையாளர் எண்ணிக்கை, ஏப்ரல் 6ம் தேதி முதல் 50 சதவீதமாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* ‘அஷ்வின், போல்ட், பிரசித் என முக்கிய  பந்துவீச்சாளர்கள் அணிக்கு பெரிய நம்பிக்கையும், உத்வேகத்தையும் தருகிறார்கள்’  என ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்கரா தெரிவித்துள்ளார்.

* ‘நாளை நடைபெற உள்ள மகளிர் உலக கோப்பை பைனலில் ஆஸ்திரேலியாவை எங்களால் வீழ்த்த முடியும்’ என்று இங்கிலாந்து அணியின் வீராங்கனை ஷோபி எக்லஸ்டோன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* ‘ஒவ்வொரு சீசனிலும் மும்பை அணி தொடக்கத்தில் சற்று தடுமாறுவது வாடிக்கை தான். இன்னும் நாட்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்ல மும்பையின்  முதல் ஆட்டம் எப்படி இருக்கும் என்ற வரலாறும் இருக்கிறது’ என்று மும்பை இந்தியன்ஸ் இயக்குநர் ஜாகீர் கான் கூறியுள்ளார்.

* ஆப்ரிக்காவில்  இருந்து ஃபிபா உலக கோப்பைக்கு நைஜீரியா தகுதி பெறாததை அடுத்து அதன் பயிற்சியாளர்  அகஸ்டின்  எகுவாவோன் பதவி விலகியுள்ளார்.

* எப்ஐஎச் ஹாக்கி புரோ லீக்கில் நாளை இந்தியா - இங்கிலாந்து ஆண்கள் அணிகள் மோதுகின்றன. அதில் வென்றால்  16 புள்ளிகளுடன் இருக்கும்  இந்தியா முதல் இடத்துக்கு முன்னேறும். தற்போது ஜெர்மனி 17 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.  டிராவில் முடிந்தாலும் கோல் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா முதல் இடத்தை எட்டும்.

Related Stories: