×

கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாபெரும் புத்தக கண்காட்சி: அமைச்சர் ஆவடி நாசர் துவக்கி வைத்தார்

திருவள்ளுர்: கலெக்டர் அலுவலக வளாகத்தில் திருவள்ளுர் மாவட்ட புத்தக கண்காட்சிக் குழு நடத்தும் முதலாவது மாபெரும் புத்தக கண்காட்சி அரங்குகள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார், ஜெயக்குமார் எம்பி, எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, ச.சந்திரன், துரை சந்திரசேகர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், செயற்பொறியாளர் ராஜவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் புத்தக கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புத்தகங்களை பார்வையிட்டு, விற்பனையை துவக்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:இந்த புத்தக திருவிழா வரும் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கண்காட்சியில் நாள்தோறும் ஒரு தலைச்சிறந்த தமிழ் சொற்பொழிவாளர்களால் கருத்துரைகள் வழங்கப்படவுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.

மேலும், மற்ற மாவட்டங்கள் வியக்கிற வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த புத்தக கண்காட்சியை திருவள்ளுர் மாவட்ட மக்கள் முழுமையாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும், என்றார். மேலும், சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தயாரிக்கப்பட்ட குறும்படத்தை வெளியிட்டார். பின்னர் பொதுமக்கள் பார்வைக்காக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தில் திரையிடப்படுவதை பார்வையிட்டு, அவ்வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். விழாவில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாடு துறை சார்பாக தயாரிக்கப்பட்ட மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை துவக்கி வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இதில், மாவட்ட வன அலுவலர் ராம்மோகன், சார் ஆட்சியர் (பயிற்சி) மகாபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியா தர்ஷினி, ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், பிஆர்ஓ பாபு, வைரவன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.   



Tags : Giant Book Fair ,Collector's Office Complex ,Minister ,Avadi Nasser , On the premises of the Collector's Office Great Book Fair: Launched by Minister Avadi Nasser
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்