×

மீண்டும் இணையும் இளையராஜா, கங்கை அமரன்

சென்னை: பல தமிழ்ப் படங்களில் இணைந்து பணியாற்றிய இசை அமைப்பாளர்கள் இளையராஜாவும், அவரது தம்பி கங்கை அமரனும் கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்கள் பிரிந்திருந்தனர். இந்நிலையில், சமீபத்தில் அவர்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசினர். தங்கள் குடும்ப உறவு முறிந்துவிடக் கூடாது என்று முடிவு செய்த அவர்கள், மீண்டும் சினிமாவில் இணைந்து பணிபுரிய திட்டமிட்டுள்ளனர்.

 இத்தகவலை வெளியிட்ட இயக்குனர் வெங்கட் பிரபு, ‘விரைவில் எனது படத்தில் இளையராஜா, கங்கை அமரன் மீண்டும் இணைய இருக்கின்றனர். அதுபற்றி நான் அறிவிப்பேன்’ என்றார். தற்போது இளையராஜா, அவரது இளைய மகன் யுவன் சங்கர் ராஜா முதல்முறை இணைந்து பணிபுரிந்துள்ள ‘மாமனிதன்’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. சீனு ராமசாமி இயக்கியுள்ள இதில் விஜய் சேதுபதி, காயத்ரி நடித்துள்ளனர்.





Tags : Reunion Ilayaraja, Gangai Amaran
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...