×

சடலத்தை ஒரு மாதம் பிரிட்ஜில் வைத்திருந்த கொடுமை; சுத்தியலால் அடித்து ‘செக்ஸ்’ நடிகை கொலை: இத்தாலியில் புகைப்படக்காரர் கைது

ரோம்: செக்ஸ் நடிகையை சுத்தியால் அடித்துக் கொன்ற புகைப்படக்காரர், அந்த நடிகையின் சடலத்தை ஒரு மாதம் பிரிட்ஜியில் வைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இத்தாலி நாட்டின் ரெஸ்கால்டினா பகுதியில் வசித்து வந்தவர் சார்லோட் ஆங்கி (26). வாசனை திரவியக் கடையில் விற்பனை உதவியாளராகப் பணியாற்றி வந்தார். கொரோனா கால ஊரடங்கால் அந்த வாசனை திரவியக் கடை மூடப்பட்டது.

தனது வேலை பறிபோனதால் மனமுடைந்த நிலையில் இருந்த ஆங்கி, வேறுவழியின்றி தனது ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதன்மூலம் இணையதளவாசிகளிடம் திடீர் பிரபலமடைந்த ஆங்கி, ஆபாச பட உலகில் அவருக்கு நல்ல வருவாயும் கிடைத்தது. கடந்த மார்ச் 11 முதல் 13ம் தேதி வரை லக்ஸி கிளப்பில் ஆபாச டான்ஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் ஆபாச நடிகையாக மாறிய சார்லோட் ஆங்கி நிகழ்ச்சிக்கு வரவில்லை. அதிர்ச்சியடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் சார்லோட் ஆங்கி மாயமானது குறித்து வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவரது ரசிகர்களில் ஒருவர், ஆங்கியை கடத்திச் சென்றிருக்கலாம் என்று தெரியவந்தது. அதையடுத்து அந்த குறிப்பிட்ட நபரை போலீசார் தேடி வந்தனர். அவரது ெபயர் ஃபோன்டானா (43) என்பதும், அவர் ஆங்கியின் பக்கத்து வீட்டுக்காரர் என்பதும், புகைப்படக் கலைஞராக ஆங்கியுடன் அவருக்கு ெநருக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ஆபாச நடிகை சார்லோட் ஆங்கிக்கும், ஃபோன்டானாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் நெருக்கமாக இருந்து வந்தனர். ஒருகட்டத்தில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. அதனால் நடிகையை தீர்த்துக் கட்ட ஃபோன்டானா முடிவு செய்தார். அதன்படி ஆங்கியை தனது வீட்டிற்கு வரவழைத்து அவரை சுத்தியால் அடித்துக் கொன்றார். பின்னர், சடலத்தை குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்தார். ஒரு மாதத்திற்கு பின்னர், அந்த சடலத்தை துண்டு துண்டாக வெட்டி தீயில் கொளுத்தி எரித்தார்.

தொடர்ந்து எரிக்கப்பட்ட சடலத்தின் கழிவுகளை சாக்குப் பையில் போட்டு, சாலையில் தூக்கி வீசியுள்ளார். தற்போது கைது செய்யப்பட்ட ஃபோன்டானா, தான் செய்த கொலையை ஒப்புக் கொண்டார். ெதாடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.

Tags : Italy , The cruelty of keeping the corpse in the bridge for a month; 'Sex' actress beaten to death with a hammer: Photographer arrested in Italy
× RELATED ஒரே நாடு, ஒரே இட்லி என சுடப்பார்க்கிறார் மோடி; நடிகர் கருணாஸ் கலாய்