×

பஞ்சாப் மாநிலத்துடன் சண்டிகரை இணைப்பதற்கான தீர்மானம் பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றம்

சண்டிகர் : பஞ்சாப் மாநிலத்துடன் சண்டிகரை இணைப்பதற்கான தீர்மானம் அம்மாநில சட்டமன்றத்தில் பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஹரியானா தனியாக பிரிக்கப்பட்ட போது, இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக சண்டிகர் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து யூனியன் பிரதேசமான சண்டிகரை பஞ்சாப் 60%மும் ஹரியானா 40மும் நிர்வகித்து வந்தன. ஆனால் தற்போது சண்டிகரை நிர்வகிக்க வேறு மாநில அதிகாரிகளை அதிகளவில் நியமிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது முந்தைய புரிந்துணர்வுக்கு எதிரானது என்பதால் சண்டிகரை முழுமையாக பஞ்சாபிற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானத்தை பஞ்சாப் சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் பகவத்மான் முன்மொழிந்தார். மாநிலங்கள் பிரிக்கப்படும் போது, தலைநகரம் தாய் மாநிலத்திலேயே இருக்க வேண்டும் என்று பகவந்த் மான் அப்போது கூறினார். சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்மொழிந்த தீர்மானம் பாஜகவை தவிர அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.


Tags : Chandigarh ,Punjab ,BJP , Punjab, Chandigarh, Resolution, BJP, Execution
× RELATED பஞ்சாப், அரியானா மாநிலங்களில் 11...